வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய பெயர் மாற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய பெயர் மாற்றம்

ஜமைக்கா: இங்கிலாந்தில் தற்போது நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னாள் உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறமுடியவில்லை. தரவரிசையில் 8வது இடத்திற்கு கீழ் பின்தங்கியதால் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

மேலும் 2019ம் ஆண்டு உலக கோப்பை தொடருக்கும் நேரடி தகுதி பெறுவதில் வெ. இண்டீசுக்கு சிக்கல் நீடிக்கிறது. தரவரிசையில் 8 இடத்திற்குள் இருந்தால் மட்டுமே நேரடி தகுதி பெற முடியும்.



இந்நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் என மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 21 ஆண்டுகளில் 2வது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் டேவ் கேமரூன் இதனை தெரிவித்துள்ளார்.

2018-23ம் ஆண்டு கால கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வளர்ச்சிக்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை