அஷ்ரப் அதிரடியில் பாகிஸ்தான் வெற்றி

தினகரன்  தினகரன்

பர்மிங்காம்: வங்கதேச அணியுடனான சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 341 ரன் குவித்தது. தொடக்க வீரர் தமிம் இக்பால் அதிகபட்சமாக 102 ரன் விளாசினார். இம்ருல் 61, முஷ்பிகுர் 46, மகமதுல்லா 29, மொசாடெக் 26, ஷாகிப் ஹசன் 23, சர்க்கார் 19, மிராஸ் 13 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 49.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 342 ரன் எடுத்து வென்றது. ஷெஷாத் 44, ஹபீஸ் 49, சோயிப் மாலிக் 72, இமத் வாசிம் 45 ரன் எடுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய பாஹிம் அஷ்ரப் 64 ரன் (30 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), ஹசன் அலி 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினர்.

மூலக்கதை