பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கெர்பர் அதிர்ச்சி தோல்வி

தினகரன்  தினகரன்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நேற்று பாரீசில் தொடங்கின. மகளிருக்கான முதல்சுற்று ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீராங்கனை ஜெர்மனியின் கெர்பர் அதிர்ச்சி ேதால்வி அடைந்தார். ரஷ்யாவின் மெக்ரோவா 6-2,6-2 என்ற நேர் செட்டில் கெர்பரை வீழ்த்தினர். 1968ல் தொடங்கப்பட்ட பிரெஞ்ச் ஓபன் சரித்திரத்தில் முதல்நிலை வீராங்கனை ஒருவர் முதல்சுற்றில் ேதால்வி அடைவது இதுவே முதல்முறை ஆகும். மற்றொரு போட்டியில் வீட்டில் நடந்த கொள்ளை முயற்சியில் கத்திக்குத்து காயம் அடைந்த செக்குடியரசு வீராங்கனை பெட்ரா குவித்தோவா 6-3,6-2 என்ற நேர் செட்டில் அமெரிக்க வீராங்கனை ஜூலியாவை வீழ்த்தினார். மற்ற போட்டிகளில் போர்டோரிகாவின் மோனிகா, அமெரிக்காவின் மாடிசன், சுவிஸ் வீராங்கனை திமியா, அமெரிக்க வீராங்கனை ஷெல்பி ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ஆல்பர்ட் 6-7(7),6-1,6-4,6-2 என்ற செட்கணக்கில் ருமேனியாவின் மாரியஸ் கோபில்லை வீழ்த்தினார். மற்ற போட்டிகளில் அர்ஜென்டினா வீரர் ஹராசியோ சீபெல்லாஸ், பிரான்ஸ் வீரர் பென்ஜமின் போன்சி, ஸ்பெயின் வீரர் குல்லர்மோ கார்சியா, ஜப்பான் வீரர் டேனியல் ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்கள்.

மூலக்கதை