‘மின்சார கார் போக்குவரத்திற்கு இந்தியா தயாராகவில்லை’

தினமலர்  தினமலர்
‘மின்சார கார் போக்குவரத்திற்கு இந்தியா தயாராகவில்லை’

ஐதராபாத் : ஹோண்டா கார்ஸ் இந்­தியா நிறு­வ­னத்­தின், தலை­வர் மற்­றும் தலைமை செயல் அதி­காரி யோச்­சிரோ யுனோ கூறி­ய­தா­வது:ஹோண்டா, மின்­சார கார் தயா­ரிப்­பில் ஈடு­பட்­டுள்­ளது. ஆனால், இந்­தியா, மின்­சார கார் போக்­கு­வ­ரத்­திற்கு இன்­னும் தயா­ரா­க­வில்லை.போது­மான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­கள் இங்கு இல்லை. மின்­சார கார் விலை, பெட்­ரோல், டீசல் கார்­களின் விலையை விட இரு மடங்கு அதி­கம் இருக்­கும். இந்­தி­யா­வில், நியா­ய­மான விலை உள்ள பொருட்­க­ளுக்­குத் தான் வர­வேற்பு இருக்­கும். அதன்­படி பார்த்­தால், விலை அதி­கம் உள்ள மின்­சார கார்­கள் பெருக, நீண்ட காலம் ஆகும். அதற்­கான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை உரு­வாக்­கு­வ­தற்­கும் அதிக காலம் பிடிக்­கும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.மத்­திய மின்­துறை அமைச்­சர் பியுஷ் கோயல், ‘வரும், 2030ல் இந்­தியா முழு­வ­தும், மின்­சார கார் போக்­கு­வ­ரத்­துக்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது’ என, சமீ­பத்­தில் தெரி­வித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை