மொபைல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க அரசு வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
மொபைல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க அரசு வலியுறுத்தல்

புதுடில்லி : ‘தொலைத்­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­கள், ஜி.எஸ்.டி.,யால் பெறும் கூடு­தல் பயன்­களை நுகர்­வோ­ருக்கு வழங்­கி­டும் நோக்­கில், மொபைல்­போன் சேவை கட்­ட­ணத்தை குறைக்க வேண்­டும்’ என, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.வரும், ஜூலை 1 முதல், நாடு முழு­வ­தும் ஒரே சீரான, ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி அம­லுக்கு வர உள்­ளது.தற்­போது, தொலைத்­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­கள், நுகர்­வோ­ரி­டம், 14 சத­வீ­தம் சேவை வரி மற்­றும், ‘ஸ்வச் பாரத், கிரிஷி கல்­யாண்’ஆகிய திட்­டங்­க­ளுக்­காக தலா, 5 சத­வீ­தம் கூடு­தல் வரி வசூ­லிக்­கின்றன.திரும்ப பெறலாம்சரக்கு மற்­றும் சேவை வரி­யில், தொலைத்­தொ­டர்பு சேவைக்கு, 18 சத­வீ­தம் வரி விதிக்­கப்­பட்­டுள்­ளது.எனி­னும், இதில், மூலப் பொருட்­க­ளுக்கு செலுத்­தப்­பட்ட வரியை, நிறு­வ­னங்­கள் திரும்­பப் பெற, வழி வகை செய்­யப்­பட்­டுள்­ளது.இது குறித்து அமைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:தொலைத்­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­கள், தற்­போ­தைய நடை­மு­றை­யில், சரக்­கு­க­ளுக்கு செலுத்­தும், ‘வாட்’ எனப்­படும் மதிப்பு கூட்டு வரியை திரும்­பப் பெற முடி­யாது. இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­க­ளுக்கு செலுத்­திய சிறப்பு கூடு­தல் வரி­யை­யும் திரும்­பப் பெற வழி­யில்லை.ஆனால், ஜி.எஸ்.டி.,யில், தொலைத்­தொ­டர்பு சேவைக்கு விதிக்­கப்­பட்­டுள்ள, 18 சத­வீத வரி என்­பது, மதிப்பு கூட்­டப்­பட்ட வரி­யை­யும் உள்­ள­டக்­கி­யது என்­ப­தால், மூலப் பொருட்­க­ளுக்கு, நிறு­வ­னங்­கள் செலுத்­திய வரியை திரும்­பப் பெறும் வசதி உள்­ளது.அத்­தொகை, அவற்­றின் விற்­று­ மு­த­லில், 2 சத­வீத அள­விற்கு இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.கூடுதல் பயன்கள்மேலும், 2016ல், அகண்ட அலை­வ­ரிசை ஒதுக்­கீட்­டிற்­கான சேவை வரி­யில், மூலப் பொருட்­க­ளுக்­கான வரியை, தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­கள், மூன்று ஆண்­டு­களில் திரும்­பப் பெறும் வசதி தற்­போது உள்­ளது.ஆனால், ஜி.எஸ்.டி.,யில், மூலப் பொருட்­க­ளுக்கு செலுத்­திய வரி முழு­வ­தை­யும், அந்த நிதி­யாண்­டிற்­குள்­ளா­கவே நிறு­வ­னங்­கள் பெற வகை செய்­யப்­பட்­டுள்­ளது.இத­னால், நடப்பு நிதி­யாண்­டி­லேயே, தொலைத்­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு, அடுத்த இரண்டு ஆண்­டு­களில் கிடைக்க வேண்­டிய வரித் தொகை திரும்­பக் கிடைத்து விடும்.இந்த வகை­யில், கடந்த நிதி­யாண்­டில், தொலைத்­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­கள் செலுத்­திய வரி­யில், 87 சத­வீ­தம் மட்­டுமே, ஜி.எஸ்.டி.,யில் செலுத்த நேரி­டும்.இத்­த­கைய பயன்­களை கருத்­தில் கொண்டு, கூடு­த­லாக கிடைக்­கும் வரி ஆதா­யத்தை, மொபைல்­போன் சேவை கட்­ட­ணத்தை குறைப்­ப­தன் மூலம்,தொலைத்­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­கள், நுகர்­வோ­ருக்கு வழங்க வேண்­டும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

ஜி.எஸ்.டி.,யில், தொலைத்­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு, 0.7 – 1 சத­வீ­தம் தான் வரி ஆதா­யம் கிடைக்­கும். அரசு தவ­றாக மதிப்­பீடு செய்­துள்­ளது.ஜி.எஸ்.டி.,யால், மொபைல்­போன் சேவை கட்­ட­ணம் உய­ரும்ராஜன் மாத்­யூஸ், டைரக்­டர் ஜென­ரல், இந்­திய மொபைல்­போன் சேவை நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்பு

மூலக்கதை