நுகர்வோர் நிதி சேவை நிறுவனங்களில் எச்.டி.எப்.சி., 7வது இடம் பிடித்தது

தினமலர்  தினமலர்
நுகர்வோர் நிதி சேவை நிறுவனங்களில் எச்.டி.எப்.சி., 7வது இடம் பிடித்தது

புதுடில்லி : சர்­வ­தேச அள­வில் சிறந்து விளங்­கும், நுகர்­வோர் நிதி சேவை நிறு­வ­னங்­களின், ‘டாப் – 10’ பட்­டி­ய­லில், இந்­தி­யா­வைச் சேர்ந்த, எச்.டி.எப்.சி., நிறு­வ­னம், ஏழா­வது இடத்தை பிடித்­துள்­ளது.

எச்.டி.எப்.சி., நிறு­வ­னம், நுகர்­வோர் நிதி சேவை­கள் துறை­யில், 1,600 கோடி டாலர் லாபம் மற்­றும் 8,100 கோடி டாலர் விற்­ப­னை­யு­டன், கடந்த ஆண்டை போலவே, ‘போர்ப்ஸ் குளோ­பல் – 2017’ பட்­டி­ய­லில், ஏழா­வது இடத்தை தக்க வைத்­துக் கொண்­டுள்­ளது. சர்­வ­தேச அள­வில், இந்­தி­யா­வி­லி­ருந்து, இந்­நி­று­வ­னம் மட்­டுமே, ‘டாப் – 10’ பட்­டி­ய­லில் இடம் பெற்­றுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. மேலும், இந்­நி­று­வ­னம், தொடர்ந்து மூன்­றா­வது ஆண்­டாக இப்­பட்­டி­ய­லில் இடம் பெற்­றுள்­ளது.

இந்த பட்­டி­ய­லில், அமெ­ரிக்­கன் எக்ஸ்­பி­ரஸ் நிறு­வ­னம் முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. கேப்­பிட்­டல் ஒன் பைனான்­ஷி­யல், விசா ஆகிய நிறு­வ­னங்­கள், முறையே, இரண்­டா­வது மற்­றும் மூன்­றா­வது இடத்தை பிடித்­துள்ளன.நிறு­வ­னங்­களின் விற்­பனை, லாபம், சொத்து, சந்தை மதிப்பு ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாக கொண்டு, இந்த பட்­டி­யல் வெளி­யி­டப்­பட்டு உள்­ளது.

மூலக்கதை