திறன் மேம்பாட்டு மையங்கள்; மாருதி சுசூகி அமைக்கிறது

தினமலர்  தினமலர்
திறன் மேம்பாட்டு மையங்கள்; மாருதி சுசூகி அமைக்கிறது

புதுடில்லி : நாட்­டின் முன்­னணி கார் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னம், 15 வாகன திறன் மேம்­பாட்டு மையங்­களை அமைக்க இருக்­கிறது. 11 மாநி­லங்­களில் உள்ள, அரசு நடத்­தும், ஐ.டி.ஐ., கல்வி நிறு­வ­னங்­களில் இந்த மையங்­களை அமைக்க, இந்­நி­று­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ளது.

முதற்­கட்­ட­மாக, நிஜா­மு­தீ­னில் உள்ள, ஐ.டி.ஐ., நிறு­வ­னத்­தில், இந்த மேம்­பாட்டு மையத்தை, மாருதி இந்­தியா நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­ன­ரும், தலை­மை செயல் அதி­கா­ரி­யு­மான, கெனிச்சி அயுக்­கவா துவக்கி வைத்­துள்­ளார். இந்த மையங்­களில் மாண­வர்­கள், வாகன பழுது நீக்­கம் உள்­ளிட்ட சேவை­க­ளுக்­கான பயிற்­சி­கள் பெற, தேவை­யான பட்­ட­றை­கள் அமைக்­கப்­படும். அது­மட்­டு­மின்றி, மாருதி நிறு­வ­னமே, தகு­தி­யான முழு­நேர பயிற்­சி­யா­ளர்­களை நிய­மித்து பயிற்­சி­களை வழங்க இருக்­கிறது.

இது குறித்து, கெனிச்சி அயுக்­கவா கூறி­ய­தா­வது: இந்த மையங்­களை ஏற்­ப­டுத்த, 6 கோடி ரூபாயை, மாருதி நிறு­வ­னம் முத­லீடு செய்ய உள்­ளது. மேலும் இதன் மூலம், ஆண்டு ஒன்­றுக்கு, 600 மாண­வர்­கள் பலன் பெறு­வார்­கள். அடுத்த ஐந்து ஆண்­டு­களில், 1.25 லட்­சம் திறன் வாய்ந்த ஊழி­யர்­கள், வாகன துறை­யின் ஒர்க்­‌ஷாப்­பு­களில் தேவைப்­ப­டு­வர் என, கணிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.

மூலக்கதை