இலங்கை இயற்கை அனர்த்தத்தில் பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு

PARIS TAMIL  PARIS TAMIL

 இலங்கையில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் இதுவரை 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதுடன் 86 பேர் காணாமல்போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
இந்த அனர்த்தத்தில் இதுவரையில் கிட்டத்தட்ட 5 இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 
களுத்துறையில் மாவட்டத்தில் மாத்திரம் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக களுத்துளை மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்து.
 
தெனியாய மொரவகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் 12 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாத்தறை மாவட்ட பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை