தெ.ஆ. க்கு எதிரான முதல் ஒன்டே இங்கிலாந்து அபார வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தெ.ஆ. க்கு எதிரான முதல் ஒன்டே இங்கிலாந்து அபார வெற்றி

லீட்ஸ்: இங்கிலாந்து -தென்ஆப்ரிக்கா அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசியது.

இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழந்து 339 ரன் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் மோர்கன் 107 ரன்  (93 பந்து) விளாசினார்.

மொயின் அலி 77, ஹேல்ஸ் 61 ரன் எடுத்தனர்.

இதையடுத்து கடின இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்ரிக்க அணி 45 ஓவரில் 267 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.

இதனால் 72 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஆம்லா 73, டுபிளசிஸ் 67, டிவில்லியர்ஸ் 45 ரன் எடுத்தனர்.

இங்கி. தரப்பில் வோக்ஸ் 4, ரஷீத், மொயின் அலி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

மொயின் அலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

.

மூலக்கதை