மான்யா தத் ரோலில் தியா மிர்சா நடிக்கிறார் - ராஜ்குமார் ஹிரானி

தினமலர்  தினமலர்
மான்யா தத் ரோலில் தியா மிர்சா நடிக்கிறார்  ராஜ்குமார் ஹிரானி

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை, சினிமாவாக உருவாகி வருகிறது. சஞ்சய்யின் நண்பரும், பிரபல இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். சஞ்சய் தத் வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சஞ்சய்யின் மனைவி மான்யா தத் ரோலில் நடிகை தியா மிர்சா நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் தியாவின் தோற்றம் மான்யா தத்துடன் பொருந்தாததால் அவர் இப்படத்தில் நீக்கப்பட்டுள்ளார் என்று செய்தி வெளியானது. ஆனால் இதை ராஜ்குமார் ஹிரானி மறுத்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்குமார் ஹிரானி கூறியிருப்பதாவது... "மான்யா தத் வேடத்தில் தியா மிர்சா தான் நடிக்கிறார். ஏற்கனவே அவர் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன, தியா இப்படத்தில் நடிக்கவில்லை என்ற செய்தி தவறான தகவல்" என்று கூறியுள்ளார்.

சஞ்சய் தத் வாழ்க்கை படம் வருகிற கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸாக உள்ளது.

மூலக்கதை