அக்ஷ்ய் ஜோடியாக நாகினி மவுனி ராய்

தினமலர்  தினமலர்
அக்ஷ்ய் ஜோடியாக நாகினி மவுனி ராய்

நாகினி எனும் பாம்பு சிரீயலில் கலக்கியவர் நடிகை மவுனி ராய். இவர் இப்போது வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார். முதல்படத்தை சல்மானின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. இந்நிலையில் சல்மானின் படத்திற்கு முன்பாகவே மவுனி ராய், அக்ஷ்ய் குமார் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். ரீமா காக்தி இயக்கத்தில், அக்ஷ்ய் குமார், கோல்டு என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அக்ஷ்ய் குமார் ஹாக்கி பயிற்சியாளராக நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் தான் அக்ஷ்ய்க்கு ஜோடியாக மவுனி ராய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தாண்டுக்குள் படம் ஆரம்பாக உள்ளது, அடுத்தாண்டு சுதந்திர தினத்தில் படம் ரிலீஸாக இருக்கிறது.

மூலக்கதை