ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.78

தினமலர்  தினமலர்
ரூபாயின் மதிப்பு சரிவு  ரூ.64.78

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று, இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 காசுகள் சரிந்து ரூ.64.78-ஆக வர்த்தகமானது. பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவாலும், வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்திருப்பதன் காரணத்தாலும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.64.55-ஆக இருந்தது.

மூலக்கதை