ஆண்களுக்கான கிரீம் ஹிமாலயா திட்டம்

தினமலர்  தினமலர்
ஆண்களுக்கான கிரீம் ஹிமாலயா திட்டம்

மும்பை : ஹிமா­லயா டிரக் கம்­பெனி, தனி­ந­பர் மற்­றும் ஆரோக்­கிய பரா­ம­ரிப்­புக்­காக, மூலிகை அடிப்­ப­டை­யில் தயா­ரிக்­கப்­பட்ட பொருட்­களை விற்­பனை செய்­கிறது. இந்­நி­று­வ­னம், ஆண்­க­ளுக்­கான முகம் கழு­வும் கிரீம் விற்­ப­னை­யின் மூலம், அதி­க­ள­வில் வரு­வாய் ஈட்ட திட்­ட­மிட்டு உள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் அதி­காரி ராஜேஷ் கிருஷ்­ண­மூர்த்தி கூறி­ய­தா­வது: இந்­தி­யா­வில், முகம் கழு­வும் கிரீம் சந்தை மதிப்பு, 1,800 கோடி ரூபா­யாக உள்­ளது. அதில், ஆண்­கள் பயன்­ப­டுத்­தும் கிரீம்­களின் பங்கு, 15 – 20 சத­வீ­தம் என்­ற­ள­வில் உள்­ளது. இது, ஆண்­டு­தோ­றும், 10 சத­வீ­தம் என்­ற­ள­வில் வளர்ச்சி கண்டு வரு­கிறது. ஒட்­டு­மொத்த முகம் கழு­வும் கிரீம் சந்­தை­யில், ஹிமா­லயா, 24 சத­வீத பங்­கு­டன் முத­லி­டத்­தில் உள்­ளது. தற்­போது, ஆண்­கள் பல­ரும், முகம் கழு­வும் கிரீமை பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர். அதன் விற்­ப­னை­யில், எங்­கள் நிறு­வ­னத்­தின் சந்தை பங்கு, 8 – 10 சத­வீ­தம் என்­ற­ள­வில் உள்­ளது. இதை, அடுத்த இரு ஆண்­டு­களில், 20 சத­வீ­த­மாக அதி­க­ரிக்க முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை