ரூ.300 கோடியில் தொழிற்சாலை; யு.எஸ்.ஜி., போரல் அமைக்கிறது

தினமலர்  தினமலர்
ரூ.300 கோடியில் தொழிற்சாலை; யு.எஸ்.ஜி., போரல் அமைக்கிறது

புதுடில்லி : யு.எஸ்.ஜி., போரல் நிறுவனம், கட்­டு­மான பொருட்­கள்தயா­ரிப்­புக்கு தேவை­யான, தொழில்­நுட்ப கரு­வி­களை தயா­ரித்து வரு­கிறது.

இந்­நி­று­வ­னம், தென்­னிந்­தி­யா­வில் கட்­டு­மான பணி­களில் பயன்­ப­டுத்­தக் கூடிய, ‘பிளாஸ்­டர்­போர்ட்’ தயா­ரிக்­கும் தொழிற்­சா­லையை, 300 கோடி ரூபாய் முத­லீட்­டில் அமைக்க உள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­னர் கவு­சிக் சங்­கர் கூறி­ய­தா­வது: எங்­கள் நிறு­வ­னம், மூன்று கோடி சதுர அடி­யில், புதிய தொழிற்­சாலை அமைக்க உள்­ளது. இதற்­காக, தென்­னிந்­தி­யா­வில் உள்ள, மாநில அர­சு­க­ளு­டன் பேச்சு நடத்­தப்­பட்டு வரு­கிறது. புதிய ஆலை உள்­ளிட்ட பணி­க­ளுக்கு, 300 கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட உள்­ளது. அதில், 100 கோடி ரூபாய், ஏற்­க­னவே உள்ள இரு ஆலை­களை நவீ­னப்­ப­டுத்­தும் பணிக்கு செல­வி­டப்­படும். புதிய ஆலை­யின் மூலம், பல­ருக்கு வேலை­வாய்ப்பு கிடைப்­ப­து­டன், நிறு­வ­னத்­தின் விற்­ப­னை­யும் அதி­க­ரிக்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை