சோசலிசக்கட்சியின் பெயர் மாற்றப்படுமா?

PARIS TAMIL  PARIS TAMIL
சோசலிசக்கட்சியின் பெயர் மாற்றப்படுமா?

முன்னாள் ஆளுங்கட்சியாக இருந்து, ஜனாதிபதித் தேர்தலின் முதற்சுற்றில் வரலாறு காணாத பெரும் தோல்வியை, பெனுவா அமோனின் மூலம் பெற்றிருந்தது. எமானுவல் மக்ரோன் மற்றும் ஜோன்-லுக் மெலோன்சோனின் வாக்குவீதங்கள், என்றுமில்லாதவாறு ஓர் உடைவை, ஒரு பரிவினையை சோசலிசக் கட்சியினுள் (parti socialiste) உண்டாக்கி உள்ளது.
 
எதிர்வரும் 11ம் திகதி மற்றும் 18ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் சோசலிசக் கட்சியினை «புதிதாய் நிறுவவும், புதிதாய் மீளமைக்கவும், அடிப்படையையே புதிதாய்க் கட்டியெழுப்பவும்» போவதாக, சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர், Jean-Christophe Cambadélis தெரிவித்துள்ளார்.
 
 
அதே நேரம் செய்தியளார், இந்த மீள் கட்டுமானத்தில் சோலிசக் கட்சியின் பெயர் மாற்றப்படுமா என வினவியதற்கு, 'அது ஒன்றும் முடியாத காரியமல்ல, அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன' என கம்பாதெலி தெரிவித்துள்ளார்.
 
ஆகவே லே ரெப்புப்ளிக்கள் கட்சியினைத் தொடர்ந்து, சோசலிசக் கட்சியும் பெயர் மாற உள்ளமை பெரும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட உள்ளதை வலியுறுத்தி வருகின்றது.
 

மூலக்கதை