முபர்கான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தினமலர்  தினமலர்
முபர்கான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

அர்ஜூன் கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஹாப் கேர்ள்பிரண்டு. இப்படத்திற்கு போதிய எதிர்பார்ப்பு இல்லை. அதனால் படத்தின் வசூலில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஹாப் கேர்ள்பிரண்டு படத்திற்கு பிறகு அர்ஜூன் கபூர், முபர்கான் என்ற படத்தில் நடிக்கிறார். அனீஸ் பாஸ்மி இயக்க, சோனி பிக்சர்ஸ் சார்பில் அஸ்வின் வர்தே மற்றும் முராத் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். அர்ஜூன் கபூர் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவருடன் இலியானா, அனில் கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். முபர்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அனில் கபூரை தாங்கி பிடித்தபடி இரண்டு வேடங்களில் நடிக்கும் அர்ஜூன் போஸ் தருகிறார். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற ஜூலை 28-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.

மூலக்கதை