பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் - எரிவாயு கசிவால் பெரும் தீ விபத்து!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில்  எரிவாயு கசிவால் பெரும் தீ விபத்து!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசின் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு மணிநேர போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 
 
ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 16 ஆம் வட்டாரத்தின் Avenue Henri-Martin வீதி மற்றும் Rue Mignard வீதி இணையும் முனையில் உள்ள எட்டு மாடி கட்டிடம் ஒன்றே தீபிடித்துள்ளது. எரிவாயு கசிவு ஏற்பட்டு பெரும் சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் எட்டாவது தளம் வரை வேகமாக தீ பரவ, உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். நூறு தீயணைப்பு வீரர்களும், 32 தீயணைப்பு வண்டிகளும் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டது. 
 
கட்டிடத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டமையால் உயிர்ச்சேதங்கள் முற்றாக தவிர்க்கப்பட்டது. ஒரு தீயணைப்பு படை வீரர் உட்பட மூவர் இலேசான காயங்களுக்கு உள்ளாகினர். மேலும் புகை மூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் பலருக்கு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. சேத விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.

மூலக்கதை