குஷ்பு தம்பி ஹீரோவாக நடிக்கும் மாயமோகினி

தினமலர்  தினமலர்
குஷ்பு தம்பி ஹீரோவாக நடிக்கும் மாயமோகினி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் உள்ளது அதியம்குப்பம். இதன் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் கே.தங்கவேலு. இவர் துணி வியாபாரம் செய்து இப்போது அந்த தொழிலில் முன்னணியில் இருக்கிறார். அவரது ஆரம்பகாலத்தில் அவருக்கு உதவியது ஒரு மோகினிப்பேயாம். அதனால்தான் இவர் உயரத்துக்கு வந்தாராம். அந்த பேய் அனுபவங்களை வைத்து மாயமோகினி என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் குஷ்புவின் தம்பி அப்துல்லா ஹீரோவாக நடிக்கிறார்.

கண்ணம்மா, என் இதய ராணி, ஒண்ணும் தெரியாத பாப்பா படங்களை இயக்கிய பாபா விக்ரமின் மகன் ராசா விக்ரம் இயக்கி உள்ளார். குஷ்புவின் சகோதரர் அப்துல்லா ஜோடியாக தாரிகாக, ஜோதிஷா நடித்துள்ளனர். இவர்களுடன் கே.ஆர்.விஜயா, எஸ்.என்.பார்வதி, ஆஷா, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.ஜெயராஜ் இசை அமைத்துள்ளார், கே.வி.ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மூலக்கதை