ஜனாதிபதி மக்ரோனின் போர்க்கோலம் - அடுத்தது என்ன?

PARIS TAMIL  PARIS TAMIL
ஜனாதிபதி மக்ரோனின் போர்க்கோலம்  அடுத்தது என்ன?

போர் நடவடிக்கைகளில் புதிய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் காட்டிவரும் தீவிரம் குறித்து, ஐரோப்பிய நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் பரவலாகப் பேசப்படுகிறது. பதவியேற்ற ஒருவார காலத்தினுள்ளே, நேற்று மாலிக்கு பயணம் மேற்கொண்ட மக்ரோன், அங்கு மாலி ஜனாதிபதியுடன் இணைந்து, பிரெஞ்சு இராணுவத்தினரைச் சந்தித்திருந்தார். 
 
இந்தச் சந்திப்பின் போது, இராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், இராணுவத்தினரோடு பல மணி நேரங்களைச் செலவிட்டு, அவர்களுக்கு பல ஆலோசனைகளையும் கட்டளைகளையும் வழங்கி உள்ளார். 
 
 
2012 ம் ஆண்டு தொடக்கம், மாலி, நைஜர், பேர்கினா பசோ உள்ளிட்ட பல ஆபிரிக்க நாடுகளில் இராணுவ வலயம் ஒன்று அமைக்கப்பட்டு, பிரெஞ்சு இராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த இராணுவ வலயம், பிரான்ஸ் நாட்டை விட 9 மடங்கு பெரியது என்று கூறப்படுகிறது. 
 
இங்கு அல் கைதா, போஹோ ஹரம் உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புக்களுடன் பிரெஞ்சு இராணுவம் மோதிவருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளார்கள். 
 
 
இந்நிலையில் அங்கு சென்ற புதிய ஜனாதிபதி மக்ரோன், வரும் நாட்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் அதற்கான சகல உதவிகளையும் தான் வழங்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இராணுவத்தினரோடு ஒன்றாக அமர்ந்து உணவு உண்டதோடு, இராணுவ தளம் ஒன்றில் அவர்களோடு சேர்ந்து தேசிய கீதத்தையும் பாடியுள்ளார் ஜனாதிபதி மக்ரோன். 
 
ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தைவிட, இராணுவ நடவடிக்கைகளில் மக்ரோன் தீவிரமாக செயல்படுவார் என்று ஆய்வாளர்கள்கள் கூறுகிறார்கள். 
 

மூலக்கதை