பிரான்ஸ் வருகிறார் இத்தாலி பிரதமர்! - இம்மானுவல் மக்ரோனோடு சந்திப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரான்ஸ் வருகிறார் இத்தாலி பிரதமர்!  இம்மானுவல் மக்ரோனோடு சந்திப்பு!!

இத்தாலிய பிரதமர் நாளை ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் புதிய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை சந்திக்கிறார். 
 
இன்று ஜனாதிபதி மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் புதிய ஜனாதிபதியாக இம்மானுவல் மக்ரோன் பதவியேற்றதன் பின்னர், வெளிநாட்டு பிரதமர் மக்ரோனை சந்திப்பது இதுவே முதன் முறையாகும். நாளை ஞாயிற்றுக்கிழமை இத்தாலியின் பிரதமர் Paolo Gentiloni எலிசேக்கு வருகை தருகிறார். இம்மானுவல் மக்ரோனை சந்தித்து பல முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கின்றார் என செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஜனாதிபதியை சந்திக்கிறார். தொடர்ந்து இரவு விருந்தில் இருவரும் கலந்துகொள்கின்றனர். தவிர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சில நாட்களின் பின்னர் சந்திக்கிறார். மேலும் G7  அமைப்புடன் தனது சந்திப்பை Taormina நகரில் மேற்கொள்ளவிருக்கிறார்.

மூலக்கதை