2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை அணி வெற்றி!

PARIS TAMIL  PARIS TAMIL
2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை அணி வெற்றி!

 கொல்கத்தாவுக்கு எதிரான 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 
10வது ஐபிஎல் T20 தொடர் கிரிக்கெட் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிச் சுற்றில் புனே அணியும், எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றது. 2வது தகுதிச் சுற்றுப் போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது.
 
இதில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி பும்ரா மற்றும் கரண் சர்மாவின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 107 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது.
 
அதிகபட்சமாக ஜாக்கி(28), சூர்யகுமார் யாதவ்(31), ஓட்டங்களும் சேர்த்தனர். மும்பை அணி சார்பில் சுழல் சூறாவளி கரண் சர்மா 4 விக்கெட்டுகளும், பும்ரா 3 விக்கெட்டுகளும், ஜான்சன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
 
இதனையடுத்து எளிய இலக்கை விரட்டிய மும்பை அணி ஆரம்பத்தில் தத்தளித்து வந்தது. இதில் தொடக்க வீரர் சிம்மன்ஸ் (3), படேல் (14), ராயுடு (6) என முக்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
 
பின்னர் வந்த அணித்தலைவர் ரோகித் சர்மா – குர்னல் பாண்டியா ஜோடிய ஓரளவு ஓட்டங்கள் சேர்த்தது. சர்மா 26 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பாண்டியாவுடன் போலார்டு ஜோடி சேர்ந்தார்.
 
இந்த ஜோடி கடைசி வரையில் மெதுவாக ஓட்டங்கள் சேர்த்து 14.3வது ஓவரில் 4 விக்கெட் மட்டும் இழந்து 111 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அணிக்கு வெற்றி பெற்றுத்தந்துள்ளது.
 
குர்னல் பாண்டியா(45), போலார்டு (9) ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா அணி சார்பில் பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டும், உமேஷ் மற்றும் நைல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
 
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புனே அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும்.

மூலக்கதை