ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் சகோதரர் புற்று நோயால் மரணம்!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் சகோதரர் புற்று நோயால் மரணம்!

முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் சகோதரர்  Philippe Hollande கடந்த புதன்கிழமை இரவு புற்றுநோயினால் இறந்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக Antibes-Juan-les-Pins மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, Philippe Hollande, புற்று நோயினால் பலமாக பாதிக்கப்பட்டிருந்தார். இவரின் மகன் மற்றும் சகோதரர் பிரான்சுவா ஒலோந்து ஆகியோரால் கவனிக்கப்படு வந்துள்ளார். 94 வயதுடைய பிரான்சுவா ஒலோந்தின் தந்தை Georges Hollande இனால் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சுவா ஒலோந்து தெரிவிக்கும் போது, 'என் சகோதரன் கடந்த சில மாதங்களாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த திங்கட்கிழமை Antibes-Juan-les-Pins மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம். நான் 48 மணிநேரங்களுக்கு முன்னர் இங்கு வந்தேன்!' என தெரிவித்துள்ளார். 
 
Philippe Hollande ஒரு Jazz இசைக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது தந்தையுடன் Cannes நகரில் வசித்து வந்துள்ளார். அருகில் இருக்கும் மயானத்தில் இறுதிச்சடங்கு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை