குவாலிபயர்-2ல் கொல்கத்தா: மும்பையை வீழ்த்துவோம்: கேப்டன் கம்பீர் நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
குவாலிபயர்2ல் கொல்கத்தா: மும்பையை வீழ்த்துவோம்: கேப்டன் கம்பீர் நம்பிக்கை

பெங்களூரு: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி பெங்களூருவில் நேற்று இரவு நடந்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த ஐதராபாத் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன் எடுத்தது. அதிகபட்சமாக வார்னர் 37 ரன் (35 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

கோல்டர் நைல் 3, உமேஷ் யாதவ் 2, டிரென்ட் போல்ட், பியூஸ் சாவ்லா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்பின் மழை பெய்ததால், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, கொல்கத்தாவின் வெற்றிக்கு, 6 ஓவர்களில் 48 ரன்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.


இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா 5. 2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்து வென்றது.

உத்தப்பா 1, யூசுப் பதான் 0, கிறிஸ் லின் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கம்பீர் 32 (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), இஷங் ஜாகி 5 ரன்கள் எடுத்து வெற்றி தேடி தந்தனர். புவனேஸ்வர் குமார், ஜோர்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

கோல்டர் நைல் ஆட்ட நாயகன் விருது வென்றார். நடப்பு சாம்பியன் ஐதராபாத் வெளியேறியது.

நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் குவாலிபயர்-2 போட்டியில் மும்பையுடன் கொல்கத்தா மோதுகிறது. இதில் வெல்லும் அணி புனேவுடன் பைனலில் விளையாடும்.



கொல்கத்தா கேப்டன் கம்பீர் கூறுகையில், ‘பந்து வீச்சாளர்களுக்குதான் அனைத்து பாராட்டுகளும் சென்று சேர வேண்டும். பேட்டிங்கில் நாங்கள் இன்னும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.

மும்பைக்கு எதிராக எங்களிடம் நல்ல சாதனைகள் இல்லை. எனினும் நாளைய போட்டியில் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.

ஐதராபாத் கேப்டன் வார்னர் கூறுகையில், ‘30 ரன்கள் குறைவாக எடுத்து விட்ேடாம். ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கவில்லை.

பாசிட்டிவ்வான எண்ணத்துடன் பந்து வீச வந்தோம். மூன்று விக்கெட்டுகளையும்
வீழ்த்தினோம்.

எனினும் கொல்கத்தா சிறப்பாக விளையாடும் என நினைத்தோம். அது நடந்து விட்டது’ என்றார்.


.

மூலக்கதை