அனைத்து இந்திய வீரர்களும் மேட்ச் வின்னர்களே... சாம்பியன்ஸ் டிராபியில் அசத்துவார்கள் என கெய்ல் உறுதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அனைத்து இந்திய வீரர்களும் மேட்ச் வின்னர்களே... சாம்பியன்ஸ் டிராபியில் அசத்துவார்கள் என கெய்ல் உறுதி

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் இந்திய வீரர்களான விராட் கோஹ்லி (308 ரன்கள்), கேதர் ஜாதவ் (267 ரன்கள்), யுவராஜ் சிங் (243 ரன்கள்) எடுத்துள்ளனர். ஆனால் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் ஆட்டம் அமையவில்லை.

வரும் ஜுன் 1ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்த மூவர் கூட்டணியை இந்தியா பெரிதும் நம்பியுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசன் சொல்லி கொள்ளும்படி அவர்களுக்கு சிறப்பாக அமையவில்லை.



ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என வெஸ்ட் இண்டீஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ஒரு நாள் கிரிக்கெட்டில் கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டு நன்றாக ‘செட்’ ஆகி விளையாட முடியும்.

ஒரு நாள் கிரிக்கெட்டுடன் ஒப்பிடுகையில், டி20 கிரிக்கெட் மிக வேகமானது.

இந்திய ‘டாப் ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் ஒரு போட்டியில் நன்றாக ‘செட்’ ஆகி விட்டால், எவ்வளவு அபாயகரமானவர்களாக உருவெடுப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இந்திய வீரர்கள் அனைவரும் மேட்ச் வின்னர்கள்தான். எனவே தற்போதைய ஐபிஎல் ‘பார்மை’ மறந்து விடுங்கள்.

ஒவ்வொரு வீரரும் தன் அணிக்காக சாம்பியன்ஸ் டிராபியை வென்று தர வேண்டும் என ஆர்வமாக உள்ளனர்.

ஆனால் இங்கிலாந்தில் ஒரே நாளில் 5 வித்தியாசமான வானிலை நிலைமை சமாளிக்க வேண்டியதிருப்பதுதான் சவாலானது’ என்றார்.

.

மூலக்கதை