ஈராக்கில் தீயை அணைத்தபோது கட்டிடம் இடிந்து விழுந்து 30 தீயணைப்பு வீரர்கள் பலி

தினகரன்  தினகரன்

டெஹ்ரான்: ஈரானில் பழமையான அடுக்குமாடி கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்துக் கொண்டிருந்தபோது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 30 தீயணைப்பு வீரர்கள் இறந்தனர். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 1960ம் ஆண்டு கட்டப்பட்ட 17 மாடி கட்டிடம் இருந்தது. பிளாஸ்கோ பில்டிங் என்ற இந்த கட்டிடம், நகரின் மத்திய பகுதியில் இருந்தது. நகரில் உள்ள உயரமான கட்டிடங்களில் இதுவும் ஒன்று. இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த கட்டிடத்தின் 9வது மாடியில் திடீரென தீப்பற்றியது.  மளமள என பரவிய தீ மற்ற மாடிகளுக்கும் பரவியது.தகவல் அறிந்து அப்பகுதி தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்தனர். அவர்கள் வானுயர ஏணிகளை பயன்படுத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பலமணிநேரம் போராடி தீயை  அணைத்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த உடமைகளை கடைக்காரர்கள் சிலர் எடுக்க சென்றனர். அப்போது தீயில் கருகியதால் பலமிழந்த அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழத்தொடங்கியது. இதில் தீயை அணைத்துக் கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இடிபாட்டில் அங்கிருந்த கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் என 38 பேர் காயம் அடைந்தனர்.

மூலக்கதை