காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தினமணி  தினமணி
காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: தமிழகத்துக்கு காவிரி நதியில் உடனடியாக கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் தண்ணீரை திறந்து விட வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

காவிரியில் நாள்தோறும் 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்கவும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், காவிரி கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு 3 நாட்களில் அணுக வேண்டும். தங்களது கோரிக்கையை தமிழகம் 3 நாட்களில் குழுவிடம் அளிக்க வேண்டும். 3 நாட்களுக்குப் பிறகு கர்நாடக அரசின் நிலையை குழு கேட்டறிய வேண்டும். இரு மாநில நிலைமைகளையும் கேட்டறிந்து 4 நாட்களில் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரியில் 50 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை