ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் அமெரிக்காவுக்கு உதவி செய்ய பிரம்மாண்ட...

தினத்தந்தி  தினத்தந்தி
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் அமெரிக்காவுக்கு உதவி செய்ய பிரம்மாண்ட...

லண்டன்,

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க ராணுவம் சண்டையிட்டு வரும் நிலையில், அதற்கு உதவி புரியும் வகையில் 'எச்.எம்.எஸ். டேரிங்' என்ற பிரம்மாண்ட போர்க்கப்பலை பிரிட்டன் அனுப்ப உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு செயலர் மைக்கேல் பாலோன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்தவை பின்வருமாறு:-

நேட்டோவில் இரண்டாவது பெரிய ராணுவமாகவும், ஐரோப்பிய பாதுகாப்பு பட்ஜெட்டில் மிகப்பெரியதாகவும் உள்ள பிரிட்டன் ராணுவம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிடுவதில் பிரிட்டன் ராணுவத்தின் முப்படைகளும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. தரையில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் மீது தினமும் எங்களது போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈராக் ராணுவத்திற்கு வெடிகுண்டு தாக்குதலை சமாளிக்கும் பயிற்சியையும் வழங்கி வருகிறது. தற்போது வான்வழித் தாக்குதல் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், அதற்கு உதவிடும் வகையில் போர் கப்பல் ஒன்றையும் அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீர்வழி வைபர் ஏவுகணைகளை கொண்டுள்ள 'எச்.எம்.எஸ். டேரிங்' போர்க்கப்பல் 75 மைல்களுக்கு அப்பால் இருந்தும் கூட வான்வழித் தாக்குதல்களை சமாளிக்கும் திறன் கொண்டதாகும்.

மூலக்கதை