அதிகாரம் இழந்த மத்திய ஆப்ரிக்க தலைவரின் மகனுக்கு பிணை

BBC  BBC
அதிகாரம் இழந்த மத்திய ஆப்ரிக்க தலைவரின் மகனுக்கு பிணை

பதவியிலிருந்து அகற்றப்பட்ட மத்திய ஆப்ரிக்க குடியரசின் தலைவர் பிரான்சுவா போசிஸின் மகன், பிணையில் விடுதலையாகியுள்ளார்.

ஜீன் பிரான்சுவா போசிஸ் தனது தந்தையின் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்.

அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறினார். கடந்த வாரம் ஐ.நா.விடம் சரணடைந்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு, முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள், சிறிது காலம் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில்,பிரான்சுவா போசிஸ் அண்டை நாடான கேமரூனுக்குத் தப்பினார். அதையடுத்து, பலாகாவுக்கு எதிரான இயக்கம் என்ற பெயரில், கிறிஸ்தவ ஆயுதக்குழுவின் வன்முறை கிளர்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார் என்று ஜீன் பிரான்சுவா மீது குற்றம் சாட்டப்பட்டது.

மூலக்கதை