வரலாற்று நோக்கில் ஷப்த கன்னிகையர் வழிபாடும் பயன்களும் (சிறப்புக் கட்டுரை, Photos)
இன்று திங்கட்கிழமை ( 04-04-2016) காலை-10.15 மணிக்கு யாழ்.குப்பிளான் கன்னிமார் கெளரியம்பாள் ஆலயத்தில் ஷப்த கன்னிகையர்களுக்காக அமைக்கப்பட்ட பரிவாரக் கோயிலின் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறத் திருவருள் கைகூடியுள்ளது.
சிவபூமியாகிய ஈழ மணித் திருநாட்டின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் சைவமும் தமிழும், கலையும் வளர்ந்த பிரதேசங்களில் ஒன்றாக செம்மண் வளம் மிக்க குப்பிளான் கிராமம் காணப்படுகின்றது. குப்பிளான் தெற்கு வீரமனைக் குறிச்சியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் அடியவர்களுக்குத் திருவருளை வாரி வழங்கும் ஆலயமாகக் கன்னிமார் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயச் சூழலில் தல விருட்சங்களில் ஆல், வேம்பு என்பன பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்தன. இந்தத் தல விருட்சங்களில் ஷப்த கன்னிகையர் என அழைக்கப்படுகின்ற கன்னிமார்த் தெய்வங்கள் நடமாடித் திரிந்ததாக நமது கிராமத்தின் முதியவர்கள் பலரும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இந்துக்களின் கிராமிய வழிபாட்டில் கன்னிமார் வழிபாடு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
மர நிழலிலே இருந்த அம்பாளுக்குச் சூழலிலுள்ள அடியவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆகம விதிமுறைகளுக்கு உட்பட்டதாகப் பேராலயத்தை நிறுவினார்கள். இவ்வாலயத்தில் சித்திரைப் பெளர்ணமியைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கன்னிமார் கெளரியம்பாள் ஆலயத்தில் ஷப்த கன்னிகையர்களுக்குத் தனியான சந்நிதானம் அமைக்க வேண்டும் என்ற பெரு விருப்பம் அம்பாள் அடியவர்களுக்கும், ஆலய பரிபாலன சபையினருக்கும் ஏற்பட்டது. ஆலய மஹோற்சவத்தின் கொடியேற்ற உபயகாரர்களாகிய சண்முகநாதன் குடும்பத்தினர் இந்தக் கைங்கரியத்தை மிகச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்கள்.
வாருங்கள்… இனி வரலாற்று நோக்கில் ஷப்த கன்னிகையர் வழிபாடும், இந்த வழிபாட்டால் நாம் பெற்றுக் கொள்ளக் கூடிய பயன்கள் என்ன ? என்பது தொடர்பிலும் விரிவாகப் பார்ப்போம்.
வரலாற்று நோக்கில் ஷப்த கன்னிகையர் வழிபாடு
இந்து சமயத்தில் சக்தி வழிபாடு மிகத் தொன்மையான காலம் தொட்டு நிலவி வருகிறது . இந்துக்களின் தொன்மை சால் நாகரீகம் எனப் போற்றப்படுகின்ற சிந்து வெளி நாகரீகத்தில் சக்தி வழிபாடுகள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. சிந்து வெளியில் கிடைத்த முத்திரையொன்றில் ஒரு மரத்தில் இரு கிளைகளுக்கு நடுவே ஒரு பெண் தலை விரி கோலமாகக் காட்சி தருகிறாள். நிலத்திலிருந்து ஏழு பெண்கள் தீபமேற்றி வழிபடும் காட்சி காணப்படுகின்றது. மரத்திலே காணப்படும் பெண் வடிவம் துர்க்கை எனவும், வழிபாடு செய்யும் ஏழு பெண்களும் சப்த மாதர்களாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இருக்கு வேதத்திலும் ஷப்த மாதர் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. இருப்பினும் இவர்களது பெயர்கள் இங்கு குறிப்பிடப்படவில்லை. இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படும் சப்த மாதர் வழிபாடு கி.பி ஆறாம் நூற்றாண்டில் முதன் முதலாக முக்கியத்துவம் பெற்றது. சாளுக்கியர்கள் தங்களைச் ஷப்த மாதர்கள்(சத்யோக மாத்ரு ) வளர்த்ததாகக் கூறிக் கொள்கின்றனர்.
தமிழ் நாட்டிலே பல்லவர், முத்தரையர், முற்காலப் பாண்டியர், சோழர், பிற்காலப் பாண்டியர், விஜய நகர வேந்தரது ஆட்சிக் காலத்தில் இவ் வழிபாடு இருந்தது என்பதைச் சிற்பச் சான்றுகளாலும், கல்வெட்டுச் சான்றுகளாலும் அறியலாம். காஞ்சிக் கைலாசநாதர் கோயிலில் பழமையான சப்த மாதர்கள் காணப்படுகின்றன.
பொதுவாகச் சப்த மாதர் உருவங்கள் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் நான்கு கைகளுடன் காணப்படுகின்றன. தமிழகத்தில் காணப்படும் சப்த மாதர் வடிவங்களுடன் சிவனும் , விநாயகரும் காணப்படுவர். சிவன் வீனாதரராகவோ, வீரபத்திரராகவோ, சப்த மாதர்களின் வலப் புறத்திலும் , விநாயகர் இடப் புறத்திலும் இடம்பெறுவர். மாதர் எழுவரும் இடக் காலை மடக்கி ஆசனத்தின் மீது வைத்து வலக் காலைக் கீழே தொங்க விட்ட நிலையில் அமர்ந்திருப்பர். இவர்களின் மேலிரு கைகள் தம் ஆண் கடவுளரின் படைக் கலங்களைத் தாங்கியும் கீழிரு கைகள் அபயத்திலும், வரதத்திலும் இருக்கும் . சப்த மாதர்களுடன் சிவபிரான் நாட்டியமாடுவது போலவும் சிற்பங்களில் காட்டப்படுவதுண்டு. திருப்பரங்குன்றத்தில் ஆனந்தத் தாண்டவமாடுகின்ற சிவபெருமானின் இடப் புறத்தில் சப்த மாதர்கள் நாட்டியமாடும் காட்சி காட்டப்பட்டுள்ளது.
சக்தி வழிபாடு சிவ வழிபாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது போல சப்த மாதர் வழிபாடும் சைவசமயத்துடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. சைவ ஆகமங்களின் ஒரு பிரிவாக எண்ணப் பெறும் “சித்தாந்த சேகரம்” எனும் நூலில் ஷப்த மாதர் வழிபாடு பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. சைவத்தில் நான்கு பிரிவுகள் உண்டு. அதில் முதன்மையானது சித்தாந்தம். அதுவே கத்தம் எனவும், எல்லாவற்றையும் விட உயர்ந்தது எனவும் , வாமம் எனும் பிரிவு சக்திக்கு முக்கியத்துவமளிக்கும் எனவும், மீகரம் என்பது ஷப்த மாதர்களுக்கு முக்கியத்துவமளிக்கும் பிரிவு எனவும் ‘சித்தாந்த சேகரம்’ எனும் நூல் குறிப்பிடுகின்றது. கிறிஸ்துவுக்கு முன்பே தமிழ் நாட்டில் ஷப்த மாதர் அல்லது ஏழு கன்னிகை வழிபாடு இருந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
ஷப்த கன்னிகையரை வழிபடுவதால் பெறும் பயன்கள்
பொதுவாகப் பிராமி, வைணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி, கெளமாரி, வராகி ஆகிய எழுவரே ஷப்த மாதர்கள் என அழைக்கப்படுவர் . பாரத முனிவரின் பரத சாஸ்திரத்தில் சப்த மாதர்கள் நாட்டிய மங்கைகளாகக் கூறப்பட்டுள்ளார்கள். இவர்கள் முறையே பிரம்மன், திருமால், இந்திரன், யமன், சிவன், முருகன் ,பலராமன் ஆகியோரின் சக்திகளாக(மனைவிகளாக) கூறப்படுவர்.
பிராமியை வழிபட்டால் நல்ல அறிவையும்-ஞானத்தையும், கெளமாரியை வழிபட்டால் நன்மக்கட் பேற்றினையும், இந்திராணியை வழிபட்டால் கன்னிப் பெண்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணையும் கிடைப்பார்கள். இவ்வாறு ஷப்த மாதர்களை வணங்குவதால் பல்வேறு உலகியல் பேறுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என நமது சமய நூல்கள் கூறுகின்றன.
எனவே, இன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேக தினத்தில் ஷப்த கன்னிகையரை வழிபட்டு அம்பாளின் திருவருளைப் பெற்றுய்வோமாக .
எழுத்தாக்கம்:- சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் (இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வு நிலை உதவிப் பணிப்பாளர்)
தொகுப்பு மற்றும் படங்கள்:- எஸ்.ரவி
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
