பிரசெல்ஸ் குண்டுவெடிப்புக்கு காரணமான தீவிரவாதி தொடர்பான முக்கிய வீடியோ வெளியீடு (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
பிரசெல்ஸ் குண்டுவெடிப்புக்கு காரணமான தீவிரவாதி தொடர்பான முக்கிய வீடியோ வெளியீடு (வீடியோ இணைப்பு)

பிரசெல்ஸ் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான தீவிரவாதி குறித்த முக்கிய வீடியோ ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது.

பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமாக தீவிரவாதி குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ முதலில் வெளியிடப்பட்டது.

அதில், தொப்பி மற்றும் மேல்கோட் அணிந்த நபர் மற்றும் இரு நபர்கள் இருந்தனர்.

மற்ற இருவரும் தாக்குதலில் பலியாக தொப்பியணிந்த நபர் மட்டும் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பொலிசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தப்பிச்சென்றவர் தொடர்பான புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

முதல் வீடியோவில் மேல் கோட் அணிந்தபடி இருந்த அந்த நபர் தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் வெறும் வெள்ளை நிற சட்டையுடன் சாலையில் போன் பேசியபடி நடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இரண்டாவது குண்டுவெடிப்பு நடைபெறுவதற்கு சில நேரங்களுக்கு முன்னர் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வீடியோவை வைத்து தங்களின் விசாரணையை பொலிசார் தீவிரபடுத்தியுள்ளனர்.

மூலக்கதை