காஷ்மீர் பிரச்சினை: 'அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்' - டிரம்ப் நம்பிக்கை
வாஷிங்டன், காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இரு தரப்பு பிரச்சினை குறித்து இரு நாட்டு தலைவர்களிடமும் பேசுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து டிரம்ப் கூறியதாவது;"இது சமீபத்திய காலங்களில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த மிகக் கொடிய தாக்குதலாகும். நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், பாகிஸ்தானுடனும் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். மேலும் அவர்கள் காஷ்மீரில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இரு நாட்டு தலைவர்களையும் நான் அறிவேன். அவர்கள் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை அவர்கள் ஒரு வழியிலோ அல்லது வேறு வழியிலோ கண்டுபிடித்துவிடுவார்கள். இந்த பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்."இவ்வாறு அவர் கூறினார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
