மினிமம் பேலன்ஸ் விவகாரம்: கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய ஐசிஐசிஐ வங்கி

சென்னை, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான ஐசிஐசிஐ, குறைந்தபட்ச இருப்புத்தொகை எனப்படும் மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்துவதாக அறிவித்தது. இதன்படி புதிதாக கணக்கு துவங்குபவர்கள் இனி மாதம் ரூ 50 ஆயிரம் மினிமம் பேலன்ஸ் பராமரிப்பது அவசியம் எனவும் ஏற்கனவே அக்கவுண்ட் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் என்ற பழைய முறையே தொடரும் என அறிவிக்கப்பட்டது. ஐசிஐசிஐ வங்கியின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கி புதிய சேமிப்பு கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக குறைத்துள்ளது. அதேபோல, சிறிய நகரங்களுக்கு 25,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பழைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000-ஆக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும் ரூ.5 ஆயிரமாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மூலக்கதை
