குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு.. சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

குற்றாலம், தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த போதிலும் நேற்று முன்தினம் ஆங்காங்கே மழை பெய்தது. பழைய குற்றாலம், குற்றாலம், குடியிருப்பு, காசிமேஜர்புரம், ஐந்தருவி, இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென வானத்தில் கருமேக கூட்டங்கள் திரண்டு சுமார் அரை மணி நேரத்திற்கும் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முக்கிய சாலை எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை கொட்டி தீர்த்ததால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. மெயின் அருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் தண்ணீர் நன்றாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் அருவிகளுக்கு சென்று ஆனந்தமாக குளித்தனர். இதனால் அருவிக்கரைகளில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டி வருகிறது.
மூலக்கதை
