முன்னாள் காதலியை சரமாரியாக குத்தி கொன்ற நபர்: 14 வருடங்கள் சிறை தண்டனை?

COOL SWISS  COOL SWISS
முன்னாள் காதலியை சரமாரியாக குத்தி கொன்ற நபர்: 14 வருடங்கள் சிறை தண்டனை?

சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Fislisbach என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே பகுதியை சேர்ந்த அல்பேனியா நாட்டை சேர்ந்த 37 வயதான நபர் ஒருவர் மற்றும் அதே நாட்டை சேர்ந்த 26 வயதான பெண் ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

எனினும், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால், காதலன் அவருடன் சேர்ந்து வாழ எண்ணியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் திகதி தனது முன்னாள் காதலியை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

‘ஒன்று அவருடன் சேர்ந்து வாழவேண்டும், இல்லையென்றால் அவரை குத்தி கொன்றுவிட வேண்டும்’ என திட்டமிட்ட அவர் ஒரு கத்தியையும் மறைத்து கொண்டு சென்றுள்ளார்.

இருவரும் ஒரு தேனீர் கடையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். ஆனால், முன்னாள் காதலிக்கு அவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை.

இதனை அறிந்த அந்த நபர் முதலில் பெண்ணின் முகத்தில் பலமாக குத்து விட்டுள்ளார். பின்னர், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அந்த பெண் அதே இடத்தில் உயிரிழந்தார். சம்பவம் அறிந்து வந்த பொலிசார் நபரை சில மணி நேரம் தேடுதலுக்கு பிறகு கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

‘குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 14 வருடங்கள் கடுமையான சிறை தண்டனை விதிக்க வேண்டும்’ என வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வழக்கு இறுதி கட்டத்தில் உள்ளதால் தண்டனைக்கான உத்தரவு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை