அசாம் சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தல்: 6 சதவீதம் வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்கள்
புதுடெல்லி, மார்ச் 31-
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி முதல் மே மாதம் 16ஆம் தேதி வரை பலகட்டங்களாகத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது.
அசாம் மாநிலத்தில் முதற்கட்டமாக மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 65 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாம் மாநில முதல்-மந்திரி தருண் கோகாய் உள்ளிட்டோர் முதற்கட்ட தேர்தலில் பங்கேற்க உள்ளனர்.
இரண்டாம் கட்டமாக 61 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய மார்ச் 21-ம் தேதி கடைசி தேதியாகும். முதல்கட்டத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், முதற்கட்ட தேர்தலுக்கான களத்தில் உள்ள வேட்பாளர்களில் சுமார் 6 சதவீதம் பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது மொத்தமுள்ள 539 வேட்பாளர்களில் 30 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 25 பேர் கொலை, கடத்தல், கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட குற்றச்சட்டுக்களில் சிக்கியவர்கள்.
பா.ஜ.க.,வை சேர்ந்த வேட்பாளர் குஷல் தோவாரி மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஜனார்தன் ஆகியோர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கட்சி வாரியாக பார்த்தால் காங்கிரசில் மொத்தமுள்ள 65 வேட்பாளர்களில் 8 பேரும், பா.ஜ.க.,வில் மொத்தமுள்ள 54 பேரில் 3 பேரும் இதில் உள்ளனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
