15,000 முட்டைகளால் தயாரிக்கப்பட்ட ராட்சத ‘ஆம்லெட்’: ஈஸ்டர் தினநாள் ஸ்பெஷல்

NEWSONEWS  NEWSONEWS
15,000 முட்டைகளால் தயாரிக்கப்பட்ட ராட்சத ‘ஆம்லெட்’: ஈஸ்டர் தினநாள் ஸ்பெஷல்

பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கில் அமைந்துள்ள Bessieres என்ற சிறிய கிராமத்தில் தான் இந்த அபார சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் திங்கள் கிழமை ஈஸ்டர் தினத்தை கொண்டாடியதால், இதில் பங்கேற்ற கிராமத்தினருக்கு ராட்சத அளவில் ஆம்லெட் சமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சுமார் 15,000 முட்டைகள் வரவழைக்கப்பட்டன. 50 பேர் கொண்ட சமையல் குழுவினர் சுமார் 1.30 மணி நேரம் செலவிட்டு அனைத்து முட்டைகளையும் உடைத்தனர்.

இந்த ஆம்லெட்டின் சுற்றளவு சுமார் 4 மீற்றர்கள் ஆகும்.

பின்னர், வாத்து கொழுப்பு, உப்பு உள்ளிட்ட தேவையான பொருட்களை சேர்த்து சுமார் 40 நிமிடங்கள் செலவிட்டு இந்த ஆம்லெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆம்லெட்டை சுவைக்க இதே கிராமத்தை சேர்ந்த 10,000 பொதுமக்கள் கலந்துக்கொண்டு அதனை உண்டு மகிழ்ந்தனர்.

இந்த கிராமத்தை பொறுத்தவரை கடந்த 1973ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஈஸ்டர் திருநாள் அன்றும் இவ்வாறு ராட்சத ஆம்லெட் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு பரிமாரப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல், பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற வீரரான நெப்போலியன் போனபர்ட் ஒருமுறை இந்த கிராமத்திற்கு அருகில் தங்கியிருந்ததாகவும், அவரது நினைவாகவும் இவ்வாறு ஒவ்வொரு வருடமும் ராட்சத ஆம்லெட் தயாரித்து மக்களுக்கு வழங்கி வருவதாக இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை