வட கொரியா உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக செயற்படுகின்றது: ஜோன் கெரி

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
வட கொரியா உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக செயற்படுகின்றது: ஜோன் கெரி

Thursday, 28 January 2016 04:57

ஐதரசன் அணுகுண்டுப் பரிசோதனையை நடத்தியுள்ளதன் மூலம் வட கொரியா உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக செயற்படுகின்றது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி குற்றஞ்சாட்டியுள்ளார். 

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜோன் கெரி, நேற்று புதன்கிழமை பீஜிங்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் அச்சுறுத்தலில் இருந்து தன்னையும், உலக நாடுகளையும் பாதுகாக்க அமெரிக்கா அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். அதற்கு சீனாவால் உதவியளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மூலக்கதை