மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 4 போலீசார் பலி

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (8:23 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (8:23 IST)

மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 4 போலீசார் பலி

ஜார்க்கண்ட் மாநில போலீசார் புதன்கிழமை கலாபகார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பின்னர் மாலை ஹூசைனாபாத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். பலாமு மாவட்டம் காசியார் பகுதியில் வந்தபோது மாவோயிஸ்டுகள் வைத்த சக்தி வாய்ந்த கண்ணி வெடியில் போலீசார் வந்த வாகனங்கள் சிக்கின.

இந்த சம்பவத்தில் 4 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மூலக்கதை