​இந்த வருடத்திற்கான ஆலன் பார்டர் விருதை வென்றார் டேவிட் வார்னர்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​இந்த வருடத்திற்கான ஆலன் பார்டர் விருதை வென்றார் டேவிட் வார்னர்

இந்த வருடத்திற்கான Allan Border விருதை ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர் வென்றார். சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக மேக்ஸ்வெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் Allan Border-ன் நினைவாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் சிறந்து விளங்கும் வீரருக்கு  Allan Border Medal வழங்கி கவுரவிக்கப்பட்டுவருகிறது, அதன்படி இந்த வருடத்திற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று மெல்போர்ன் நகரில் களைகட்டியது, 

இந்த வருடத்திற்கான Allan Border விருதை ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டகாரர் வார்னர் தட்டிச்சென்றார், இவர் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டன் ஸ்மித்தை 21 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி இந்த விருதை தட்டிச்சென்றுள்ளார். 

மேலும் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் தேர்வாகி அசத்தியுள்ளார். சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் தட்டிச்சென்றுள்ளார், சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரராக Adam Voges தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த வீராங்கனையாக Ellyse Perry தேர்வாகியுள்ளார்.

மூலக்கதை