மதுப்பழக்கம் அதிகம் உள்ளவர்களில் தமிழகம் நான்காவது இடத்தில்: ராமதாஸ்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
மதுப்பழக்கம் அதிகம் உள்ளவர்களில் தமிழகம் நான்காவது இடத்தில்: ராமதாஸ்

Monday, 25 January 2016 17:23

மதுப்பழக்கம் அதிகம் உள்ளவர்களில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது என்கிற தகவல் வேதனை அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

தேசிய குடும்ப நல அமைப்பு மதுப்பழக்கம் உள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களை ஆய்வு செய்தது.அதன் படி மதுப்பழக்கம் அதிகம் உள்ளவர்கள் என்று 14 மானிலங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

திரிபுரா, அந்தமான், சிக்கிம் உள்ளிட்ட சிறு மாநிலங்கள் மதுப்பழக்கம் அதிகம் உள்ளவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களிலும், அடுத்து நான்காவது இடத்தில் தமிழகமும் உள்ளது. இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள ராமதாஸ்,அதிகம் மதுப்பழக்கம் உள்ளவர்கள் பட்டியலில் தமிழகம் 4 வது இடத்தில் உள்ளது என்பது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

 

மூலக்கதை