பங்குச் சந்தையில் நுழைவது எப்படி? உங்கள் சந்தேகங்களுக்கான விடை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
பங்குச் சந்தையில் நுழைவது எப்படி? உங்கள் சந்தேகங்களுக்கான விடை

பங்குச் சந்தையில் நுழைவது எப்படி? அதில் முதலீடு செய்தால் லாபம் சம்பாதிக்க முடியுமா?  பங்குகள் வாங்க, விற்க தேவையான கணக்குகளை எங்கே? யாரிடம் ஆரம்பிக்க வேண்டும்? இது பற்றிய சந்தேகங்களுக்கெல்லாம் விடை இதோ உங்களுக்காக..

பங்குச் சந்தை என்பது ஒரு பெரிய நிறுவனம் தொழில் தொடங்க தன்னுடைய சொந்த முதலீட்டோடு, பொது மக்களையும் பங்குதாரர்களாக சேர்த்துக்கொண்டு வியாபாரம் நடத்த உதவுவது. இதில் இலாபமும், நட்டமும் இருதரப்பினரையும் சாரும். பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாது, அதற்கென SEBI அனுமதி பெற்ற ஒரு தரகு நிறுவனம் மூலம் மட்டும் பங்குசந்தையில் முதலீடு செய்ய முடியும். 

பங்குசந்தையில் இருவிதமான கணக்குகள் உள்ளன

1. ட்ரேடிங் கணக்கு - பங்குகளை வாங்க, விற்க
2. டிமேட் கணக்கு - நல்ல பங்குகளைச் சேமிக்க

கணக்கை தொடங்க தேவையானவை 

1. உங்களது புகைப்படம்   
2. PAN CARD சான்று   
3. முகவரி சான்று   
4. வங்கி கணக்கு சான்று   
5. ரத்து செய்யப்பட்ட காசோலை  

கணக்கை தொடங்கும் முன்  

1. நல்ல தரகு நிறுவனமா ?  
2. SEBI - REG NO சரிபார்த்தல்  
3. குறைவான தரகுதான் வசூலிக்கின்றனவா ? 
4. தரமான சேவை கிடைக்குமா ? 
5. தரமான பரிந்துரைகள் கிடைக்குமா ?
 போன்றவற்றை சரிபார்த்துக்கொளுங்கள், 

இலவசமாக கணக்கை தொடங்கவும் நிறைய நிறுவனங்கள் உள்ளன. ஆனால் தக்க சமயத்தில் சரியான பரிந்துரையும், சேவையும் அளிக்குமா? என்பதை முன்பே தெரிந்துகொள்ள வேண்டும்.

பங்குச்சந்தை முதலீடு லாபம் தருமா? என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. நிச்சயமாக கவனமுடன் செயல்பட்டால் பங்குச்சந்தை நல்ல லாபம் தரும். இதற்கு அரசும் நிறைய சலுகைகளை தருவதாக கூறுகிறார், பங்குச்சந்தை நிபுணர் T.R.அருள்ராஜன்.

5 மடங்கு, 10 மடங்கு லாபம் தருகிறோம் என பல்வேறு போலியான விளம்பரங்கள் நாம் பார்க்க முடிகிறது. அதை நம்பாமல், தக்க வழிகாட்டுதலின் அடிப்படையில் பங்கு வியாபாரத்தை தெரிந்துகொண்டு முடிவு செய்யும் நபராக நீங்கள் மாறினால் சிகரம் தொடலாம்.

மூலக்கதை