தஜிகிஸ்தானில் 13,000 பேரின் தாடி மீசைகளை பொலிஸார் மழிப்பு!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
தஜிகிஸ்தானில் 13,000 பேரின் தாடி மீசைகளை பொலிஸார் மழிப்பு!

Friday, 22 January 2016 05:01

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் அரச ஆணைக்கு இங்க 13,000 பேரின் தாடி மீசைகளை அந்நாட்டுப் பொலிஸார் மழித்துள்ளனர். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன், ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலையான தஜிகிஸ்தான் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடாகும். அந்நாட்டின் ஜனாதிபதியான ரஹ்மான் மத அடிப்படைவாதத்துக்கு முடிவு கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதனொரு கட்டமாக, நாட்டின் ஒரே முஸ்லிம் கட்சிக்கு கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது. அத்தோடு, அரபு மொழியிலான வெளிநாட்டு பெயர்களை வைப்பதற்கும், உறவுகளுக்கிடையிலான திருமணத்திற்கும் தடை விதிக்க, அந்நாட்டு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதுவும், ஜனாதிபதியின் ஒப்புதலோடு நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே, 13,000 முஸ்லிம் ஆண்களின் தாடி மீசையை மழிக்கும் உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்தார். அத்தோடு, பெண்கள் பர்தா அணிவதிலிருந்தும் விலக்களித்துள்ளார்.

மூலக்கதை