தைவான் புதிய ஜனாதிபதியாக சைய்- ஜிங் வென் தெரிவு!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
தைவான் புதிய ஜனாதிபதியாக சைய் ஜிங் வென் தெரிவு!

Sunday, 17 January 2016 04:53

தைவானில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் புதிய ஜனாதிபதியாக சைய்- ஜிங் வென் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், தைவானின் முதல் பெண் ஜனாதிபதி என்கிற பெருமையை அவர் பெறுகின்றார். 

அத்தோடு, கடந்த எட்டு ஆண்டுகளாக தைவானில் நடந்து வந்த சீன ஆதரவு ஆட்சிக்கு முடிவு கட்டப்படுகின்றது. தைவானை கடந்த எட்டு ஆண்டுகளாக ஆண்ட குவோமின்டாங் கட்சி, சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஜனநாயக முன்னேற்றக் கட்சிக்கு அதிக 56 வீதமான மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. இதன்மூலம் பெரும்பான்மை வெற்றிபெற்றுள்ள சைய்- ஜிங் வென் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கின்றார்.

மூலக்கதை