அதிக சம்பளம் கேட்ட தமன்னா

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிக சம்பளம் கேட்ட தமன்னா

திரைச்செய்தி Wednesday, December 30th, 2015

தமன்னா

கதையைக் கேட்டு அதில் தனது கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து, அதற்கேற்றாற் போல சம்பளம் பேசி நடிகைகள் நடித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது போலும். கதையே கேட்காமல் எவ்வளவு சம்பளம் என்று கேட்கிற நடிகைகள் அதிகரித்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் புலம்பல் நிலவுகிறது. சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘தர்மதுரை’.

இப்படத்தில் நடிப்பதற்காகத் தமன்னாவிடம் கேட்டுப் பார்த்தார்கள். முதலில் கால்‌ஷீட் கேட்டுச் சென்றபோது கதை, நாயகன் போன்ற விவரங்களை எல்லாம் கேட்காமல், இவ்வளவு சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன் என்று சொன்னாராம் தமன்னா. அவர் கேட்ட சம்பளத்தால் படக்குழுவினர் மிரண்டு விட்டார்களாம். பின்னர் படத்தின் கதை, அதில் அவருடைய கதாபாத்திரம் இதையெல்லாம் விலாவாரியாக இயக்குநர் விளக்கிச் சொல்ல, கொஞ்சம் இறங்கி வந்து சில லட்சங்களைக் குறைத்து நடிக்க சம்மதித்திருக்கிறார்.

மூலக்கதை