சேட்டக்காரங்க படத்தில் கன்னட நடிகை

தினகரன்  தினகரன்
சேட்டக்காரங்க படத்தில் கன்னட நடிகை

சென்னை, : புதுமுகங்கள் உருவாக்கிய படம், ‘சேட்டக்காரங்க’. விஷ்வா, கீர்த்தி, ராகவா, அலீஷா, அன்புச்செல்வன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, குமரன்ஜி. இசை, கவிக்கண்ணன். படத்தைப் பற்றி இயக்குனர் எம்.முத்துமாணிக்கம் கூறியதாவது: நண்பனின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் ஹீரோ, நண்பனின் பக்கத்து வீட்டுப் பெண்ணை காதலிக்கிறான். அதே பெண்ணை சின்ன வயதிலிருந்தே நண்பனும் காதலிப்பது ெதரிகிறது. யார், யாருக்காக விட்டுக் கொடுக்கிறார்கள் என்பது கதை. நட்பு, காதல், துரோகம் மூன்றின் கலவையாக படம் உருவாகி இருக்கிறது. கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழநி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். நட்பையும் பிரிக்கின்ற சக்தி காதலுக்கு உண்டு என்பதுதான் கதையின் மையக்கரு. ஹீரோயின் கீர்த்தி கன்னடப் படங்களில் நடித்தவர். இந்தப் படத்தின் மூலம் தமிழில் அவரை அறிமுகப்படுத்துகிறோம்.

மூலக்கதை