இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக பயங்கர மோதல்: பரிதாபமாக உயிரிழந்த விமானி (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக பயங்கர மோதல்: பரிதாபமாக உயிரிழந்த விமானி (வீடியோ இணைப்பு)

Tortoreto நகரில் உள்ள Adriatic கடற்கரையில் நேற்று Frecce Tricolori என்ற சிறிய ரக விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

கடற்கரையில் மக்கள் இந்த சாகச நிகழ்ச்சியை உற்சாகமாக கண்டு களித்துக்கொண்டிருந்தபோது திடீரென இரண்டு விமானங்கள் மிக அருகில் பயணித்துள்ளது.

அப்போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் இரண்டு விமானங்களும் நேருக்கு நேராக பயங்கரமாக மோதிக்கொண்டன.

பார்வையாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விபத்தில் இரண்டு விமானங்களும் சட்டென தீப்பிடித்து எரிந்துள்ளன. ஆனால், இரண்டு விமானிகளில் ஒருவர் மட்டும் கணப்பொழுதில் விமானத்தை விட்டு பிரிந்து பாராசூட் உதவியுடன் கடலில் குதித்துள்ளார்.

சியன்னாவை சேர்ந்த Marco Ricci(47) என்ற விமானி விபத்திலிருந்து தப்பிக்க முடியாமல் விமானத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விபத்து நடந்து முடிந்தவுடன் கடற்கரைக்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து செயல்பட்டு பாதிப்புக்குள்ளான விமானத்தை கடலிலிருந்து மீட்டனர்.

அப்போது, விமானத்திற்குள் இருந்து Marco Ricci உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மற்றொரு விமானியான Luigi Wilmo Franceschetti(43) என்பவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து குறித்து பேசிய Marco Valenti என்ற சுற்றுலா பயணி, கடற்கரையில் உற்சாகமாக நிகழ்ச்சியை கண்டுகளித்துக் கொண்டிருந்தபோது கண் இமைக்கும் நேரத்தில் விபத்து நிகழ்ந்து இரண்டு விமானங்களும் கடலில் விழுந்து விட்டன என்றார்.

விமான விபத்து குறித்து Flight Safety Agency (ANSV) விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிறுவன அதிகாரியான Stefano Giovagnoni என்பவர் கூறுகையில், விசாரணையின் முதற்கட்டமாக விமான விபத்து ஏற்படுத்தி விமானி ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக சந்தேகத்தின் பேரில் Luigi Wilmo Franceschetti மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக கூறியுள்ளார்.

மூலக்கதை