24-ந்தேதி விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்: திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தரிசனம்
திருப்பதி, அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக, 6,500 கிலோ எடையில், 'புளூ பேர்ட்' செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை, 'இஸ்ரோ' விண்ணில் செலுத்த உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, வரும், டிசம்பர் 24ம் தேதி காலை, 8:54 மணிக்கு, எல்.வி.எம்., 3 ராக்கெட் மூலம் 'புளூ பேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. நாளை காலை இதற்கான கவுண்ட்டவுன் தொடங்குகிறது. இந்த நிலையில், விண்ணில் செலுத்தப்படும் புளூ பேர்ட் செயற்கைக்கோள் திட்டம் வெற்றி பெற வேண்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது எல்.வி.எம்., 3 ராக்கெட்டின் சிறிய மாதிரியை ஏழுமலையான் சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தினர். தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்கு பிரசாரதம் வழங்கினர். இதன் பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், வருகிற புதன்கிழமை எல்.வி.எம்., 3 ராக்கெட் மூலம் 'புளூ பேர்ட்' செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது. இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்டதிலேயே அதிக எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவது, இந்த பணியின் நோக்கமாகும். பாகுபலி ராக்கெட்டை (எம்6 ராக்கெட்) பயன்படுத்தி, ப்ளூபேர்டு செயற்கைக்கோளை ஏவுவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம் 027ல் சந்திரயான் - 4 திட்டம் முழுமை பெறும்.” இவ்வாறு அவர் கூறினார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
