கள்ளக்காதலனுடன் உல்லாசம்: கண்டித்த கணவரை கிரைண்டரில் அரைத்த இளம்பெண்

  தினத்தந்தி
கள்ளக்காதலனுடன் உல்லாசம்: கண்டித்த கணவரை கிரைண்டரில் அரைத்த இளம்பெண்

லக்னோ, உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் அக்‌ஷய் (வயது 36) இவரது மனைவி பெயர் ரூபி (வயது 28) இவர்கள் இருவரும் காசியாபாத்தில் வசித்து வந்தனர். ரூபிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு வாலிபருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இந்தநிலையில் இவர்களது பழக்கம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவரவே அரசல் புரசலாக பேசிக்கொண்டனர்.இதையடுத்து ரூபியை கண்காணிக்க தொடங்கினார் அக்‌ஷய். தான் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி சென்றார். கணவர் தான் வேலைக்கு சென்றுவிட்டாரே என்று நினைத்த ரூபி தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். திடீரென வீட்டிற்குள் நுழைந்த அக்சய், மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மனைவியை கடுமையாக கண்டித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். கணவர் கண்டித்தும் திருந்தாத ரூபா வழக்கமாக கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்ட ரூபி தனது காதலனுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார்.ரூபி தனது காதலன் மற்றும் சில நண்பர்களின் உதவியுடன் அக்சயை கொலை செய்துள்ளார். கொலையை மறைப்பதற்காகவும், உடல் பாகங்களை எளிதாக அப்புறப்படுத்துவதற்காகவும் கணவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். பின்னர் உடலின் சில பாகங்களைச் சிதைக்க கிரைண்டர், மிக்ஸியைப் பயன்படுத்தியதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் அந்த உடல் பாகங்களைச் சிறு சிறு பொட்டலங்களாகக் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர். அக்சய் காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ரூபியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். தற்போது ரூபி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த காதலன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை