மனைவியுடன் தகராறு: 4 வயது மகனை அடித்துக்கொன்ற நபர் - அதிர்ச்சி சம்பவம்
லக்னோ,உத்தரபிரதேச மாநிலம் பதோகி மாவட்டம் கவாலி கிராமத்தை சேர்ந்தவர் ராம்ஜி. இவருக்கு திருமணமாகி மனைவி,4 வயதில் விகாஸ் என்ற மகன் இருந்தார். இதனிடையே, மதுபோதைக்கு அடிமையான ராம்ஜி அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ராம்ஜி நேற்று மீண்டும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவிக்கு, ராம்ஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராம்ஜி வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மகன் விகாசை தரையில் வீசி அடித்துள்ளார். இதில், படுகாயமடைந்த சிறுவன் விகாசை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான ராம்ஜியை தீவிரமாக தேடி வருகின்றனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
