தாய்லாந்து - கம்போடியா மோதலால் இடம்பெயரும் மக்கள்
கம்போடியா, தாய்லாந்து - கம்போடியா இடையே நுாறாண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த எல்லை பிரச்சினை, ஜூலையில் மோதலாக வெடித்தது. ஐந்து நாட்கள் நீடித்த மோதலில் இரு தரப்பிலும் 43 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் மலேஷிய அதிபர் அன்வர் இப்ராஹிம் முயற்சியால், அக்டோபரில் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கடந்த டிசம்பர் 7ம் தேதி நடந்த மோதலில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால், மீண்டும் இரு நாடுகளுக்கிடையே சண்டை மூண்டுள்ளது. ஒரு வாரமாக மோதல் நீடிக்கும் நிலையில், இரு தரப்பிலும் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர், தாய்லாந்து- கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். கம்போடியா எல்லையில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் இடங்களில், தாய்லாந்து மீண்டும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கனரக பீரங்கிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படுவதாக கம்போடியா புகார் கூறி வருகிறது. இந்தநிலையில், தாய்லாந்து - கம்போடியா இடையே நாளுக்குநாள் அதிகரித்து வரும் ராணுவ தாக்குதல்களால், தாய்லாந்தில் 4 லட்சம் பேரும், கம்போடியாவில் 5 லட்சம் பேரும் தங்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். எல்லை பகுதியில் அமைந்துள்ள பழங்கால தா முயென் தாம் என்ற இந்து கோவில் யாருக்கு சொந்தம்? என்பதே இருநாடுகளின் மோதல்களுக்கு மையப்புள்ளியாக உள்ளது. டிசம்பர் 7-ல் மீண்டும் தொடங்கிய மோதலில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர்.




ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
